சிறுத்தை தாக்கியதில் பசு மாடு பலி - கிராம மக்கள் அச்சம்
- வேலூர் மாவட்டம் குடியாத்தம்,கே.வி குப்பம்,பேரணாம்பட்டு உள்ளிட்ட வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் காணப்படுவதாக கூறப்படும் நிலையில் காந்தி கணவாய் பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பசுமாடு வனப்பகுதிக்கு அருகே மேய்ச்சலுக்குச் சென்ற போது சிறுத்தை தாக்கி பலியானது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தொடர்ந்து கால்நடைகளை தாக்கி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Next Story
