

விருத்தாசலம் அருகே பசு மாடு பசியால் வாடும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது. அடரி கிராமத்தை
சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீட்டில் 4 குட்டிகளை ஈன்ற ஆடு பாலூட்டவில்லை. இதனால் பசியால் தவித்த ஆட்டு குட்டிகளுக்கு அன்பழகன் வளர்த்து வரும் பசுமாடு தினந்தோறும் இருவேளை பால் கொடுத்து வருகிறது. கன்றுக்குட்டியை விட பாசத்தோடு ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்