

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை ஒரு சில நிறுவனங்களுக்கு தளர்த்துவது குறித்த பரிந்துரையை நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சரிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணி அளவில் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, 12 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடனும்12.30 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு, ஊரடங்கு விதிகளை தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.