மக்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் விநியோகம் - தொலைபேசி சேவையை துவங்கிய மருந்து வணிகர்கள்

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வீடுகளிலேயே மருந்துகள் கிடைக்கும் விதமாக, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 1800 1212 172 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் விநியோகம் - தொலைபேசி சேவையை துவங்கிய மருந்து வணிகர்கள்
Published on

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வீடுகளிலேயே மருந்துகள் கிடைக்கும் விதமாக, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 1800 1212 172 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் இந்த சேவையை துவங்கிவைத்து பேசிய அந்த அமைப்பின் மாநில தலைவர் மனோகரன், தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 10 ஆயிரம் மருந்தகங்களில் இந்த சேவை துவங்கப்பட்டு உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் 40 ஆயிரம் மருந்தகங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com