"பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை" - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே சம்பந்தப்பட்ட நபரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி அறிவித்து
"பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை" - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Published on
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மைய பிரதிநிதிகளிடம் கலந்து ஆலோசித்த பின்னர் இதனை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது சென்னையில் 30 பரிசோதனை மையங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த மையங்களில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விபரங்களை சேகரிப்பது உள்ளிட்ட வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். சோதனைக்கு வருபவர்கள் தங்கள் சுய விபரங்களை வழங்குவதோடு அவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில் உள்ளவர்கள் விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 6 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com