கொரனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர், உயிரிழந்தவர் விவரம் - மண்டல பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் ? என்ற விவரங்களை சேகரித்து அனுப்ப, அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
கொரனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர், உயிரிழந்தவர் விவரம் - மண்டல பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Published on
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் போன்ற கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில், எத்தனை பேருக்கு தற்போது வரை கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ? எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரங்களை தமிழக அரசு சேகரித்து வருகிறது. இது தொடர்பான விவரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்ய அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரனா தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை, அவர்கள் வகிக்கும் பதவி, சிகிச்சை பெறுபவரா? அல்லது குணமடைந்தவரா என்ற அனைத்து விவரங்களையும் சேகரிக்க அதில் அறிவுறுத்த​ப்பட்டு உள்ளது. மக்கள் அதிகளவு கூடும் கூட்டுறவு நிறுவனங்களில், தொற்று அதிகளவில் இருப்பதால் பாதிக்கப்பட்ட அலுவலர்களுக்கு அரசிடம் நிவாரணம் பெற்றுத் தர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com