டிசி-யை கிழித்ததும் வந்த நல்ல புத்தி.. கலெக்டர் ஆபிஸில் +2 மாணவன் யூனிபார்மோடு கதறல்

டிசி-யை கிழித்ததும் வந்த நல்ல புத்தி.. கலெக்டர் ஆபிஸில் +2 மாணவன் யூனிபார்மோடு கதறல்
Published on

தன்னை பள்ளியில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி மாணவர் ஒருவர் சீருடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.காரமடை அடுத்த புங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர், புஜகனூரில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் பள்ளியில் போதை பொருட்களை பயன்படுத்தியதாக அவருடன் சேர்த்து சில மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சம்பந்தப்பட்ட மாணவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடையுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு படிக்க வேண்டும் என ஆசை உள்ளதாகவும், ஆனால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பள்ளி நிர்வாகம் சேர்த்துக்கொள்ளவில்லை எனவும் மாணவர் குமுறியுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com