கோவையில் பிரபல கோயிலின் வாழ்நாள் பரம்பரை அறங்காவலர் சஸ்பெண்ட்

x

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, 125 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலைய குழுவினர் மீட்டுள்ளனர்.

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு குறித்து, எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயில் அறங்காவலர் சி.கே.கண்ணன் பேட்டியளித்தார். அதில் கிருஷ்ணசாமி என்பவர் இந்து சமய அறநிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், வாழ்நாள் பரம்பரை அறங்காவலராக பலரை நியமித்து நீக்கியதாக தெரிவித்தார். மேலும் அவரால் அறங்காவலராக நியமிக்கப்பட்ட திருமூர்த்தி என்பவர், முறைகேடுகளில் ஈடுபட்டு கையாடல் செய்து வந்ததாகவும் கண்ணன் குறிப்பிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழு, தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 125 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணசாமி, திருமூர்த்தி ஆகியோரை, கோயில் வாழ்நாள் பரம்பரை அறங்காவலர் பதவியில் இருந்து சஸ்பென்ட் செய்துள்ளதாகவும் கண்ணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்