அப்பாவை துடிதுடிக்க கொன்ற மகன் -வெளியான அதிர்ச்சி தகவல்

கருமத்தம்பட்டி அடுத்த அனந்தபுரம் பகுதியை சேர்ந்த சென்னிமலை. 94 வயதான இவருக்கு, 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வரும் நிலையில், சென்னிமலை இளைய மகனான ஆறுச்சாமியுடன் வசித்து வந்தார். இதனிடையே, சமீபத்தில் சொத்து தகராறு ஏற்பட சென்னிமலை மகன்கள் மற்றும் மகளுக்கு சொத்தை பிரித்து தந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியில் இருந்த ஆறுச்சாமி படுத்த படுக்கையாக இருந்த தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தந்தையின் சாவில் சந்தேகமடைந்த மற்ற மகன்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, உட​லை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில், கழுத்தை நெரித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆறுசாமியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com