நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் - 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருப்பூரை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் - 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
Published on

நீதித்துறை, வழக்கறிஞர்கள், காவல் துறையினரைப் பற்றி மோசமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக திருப்பூரை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன், ராம்மோகன் மற்றும் வித்யா கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் விண்ணப்பிப்பதற்காக அங்கேரிபாளையத்தை சேர்ந்த பழனிகுமார் , நாகராஜன் , விஜயகுமார், சிவக்குமார், சரவணன், ராக்கிமுத்து , சுப்ரமணியன், ஆகியோர், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் தகவல் அறிக்கையை கேட்டு நீதிமன்ற பணியாளர்களுக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேர்களும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

=======

X

Thanthi TV
www.thanthitv.com