Court | IPS | உத்தரவு ரத்து - அதிரடி காட்டிய கோர்ட்
#court | #ips | #AshishRawat உத்தரவு ரத்து - அதிரடி காட்டிய கோர்ட் உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்காமல் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத்தடை விதித்தது. தஞ்சை மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய ஆசிஸ் ராவத், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும் என்றும் கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம், ஆசிஸ் ராவத் மீது வழக்குப்பதிய உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஆசிஸ் ராவத் மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர், அரசு அதிகாரி ஒருவர் மீது வழக்குப்பதிய உத்தரவிடுவதற்கு முன், உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும் என விதி உள்ளது.. விதியை பின்பற்றாமல் அவசர அவசரமாக ஐ.பி.எஸ். அதிகாரி மீது வழக்குப்பதிய உத்தரவிட்டது சட்டத்திற்கு முரணானது என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தார்.
