Madurai | சர்வீஸ் செய்யாமல் அலட்சியம்... கார் கம்பேனிக்கு இடியை இறக்கிய கோர்ட்

சர்வீஸ் செய்யாமல் அலட்சியம்... கார் கம்பேனிக்கு இடியை இறக்கிய கோர்ட்

சர்வீஸ் செய்யாமல் அலட்சியம்... கார் கம்பேனிக்கு இடியை இறக்கிய கோர்ட் விபத்தில் சிக்கிய காரை 9 மாதங்களாக பழுது நீக்கித் தராமல் அலைக்கழித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கார் நிறுவனத்திற்கு மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், 23 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய மின்சார கிரெட்டா கார், விபத்தில் சிக்கிய நிலையில், 9 மாதங்களாக பழுது நீக்கப்படவில்லை என புகார் அளித்திருந்தார். பின்னர் வாகனம் வழங்கப்பட்டபோதும், 7 கிலோமீட்டருக்குள் பேட்டரி கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் சேவைக் குறைபாடு உறுதி செய்யப்பட்டதால், 5 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், 10 ஆயிரம் ரூபாய்யை வழக்குச் செலவுக்காகவும் வழங்க ​ஹூண்டாய் மற்றும் கார் விற்பனை நிறுவனத்திற்கு நுகர்வோர் உத்தரவிட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com