Court Reels | நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நின்றபடி ரீல்ஸ் - தீயாய் பரவி கிளம்பிய சர்ச்சை
நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே வீடியோ எடுத்து, Instagram Reels வெளியிட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. குற்ற செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பரத் என்ற இளைஞர், கானா பாடல் வைத்து இந்த ரீல்ஸை வெளியிட்டுள்ளார். நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வெளியிடுவது, Contempt of Court உட்பட பல சட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட குற்றமாக பார்க்கும்போது, இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், வீடியோ வெளியிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
