திருட்டு வீடியோ பிரச்சினையை தடுக்க, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு திரைப்படத்துக்கும் இவ்வாறு வழக்கு தொடர்வதற்கு பதில், பேச்சு நடத்தி, முடிவெடுக்கும்படி, உள்துறை செயலாளருக்கும், டி ஜி பி க்கும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டுள்ளார்.