Love | ஒரே சமூகமாக இருந்தாலும் வலைவீசி தேடும் குடும்பம் - மாலையோடு தலைதெறிக்க ஓடிவந்த காதல் `ஜோடி’

ஒரே சமூகமாக இருந்தாலும் வலைவீசி தேடும் குடும்பம் - மாலையோடு தலைதெறிக்க ஓடிவந்த காதல் `ஜோடி’

காதல் திருமணம் செய்த ஜோடி - காவல் நிலையத்தில் தஞ்சம் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி உயிருக்கு பயந்து மாலையுடன் நாகை மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறைச் சேர்ந்த ஜெகன், செம்மங்குடியைச் சேர்ந்த ஜனனி ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், பெற்றோர் அவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் நாகப்பட்டினத்திற்கு வந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமண செய்ததை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் தீவிரமாக அவர்களை தேடி வந்ததாகவும், இதையறிந்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com