கல்யாணம் முடிந்த கையோடு மனு கொடுக்க வந்த தம்பதி -காரணத்தை கேட்டு நெகிழ்ந்து போன மக்கள்

x

சிதம்பரத்தில், கண் பார்வையற்ற தனது மாற்றுத்திறனாளி அண்ணனின் மனைவிக்காக, அவரது தம்பி ஒருவர் மணக்கோலத்தில் 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' முகாமில் வந்து, மனு அளித்த சம்பவம் நடந்துள்ளது. பாலுத்தான் கரைக் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவருக்கும், ஜெனிதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில், சிதம்பரம் சி.கொத்தங்குடி தெரு பகுதியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு திருமணம் முடிந்த கையோடு, மாலையும் கழுத்துமாக வந்த தம்பதி, சந்துருவின் அண்ணன் மாற்றுத்திறனாளியான பரஞ்சோதி என்பவரின் மனைவிக்கு அங்கன்வாடியில் 'சமையலர் வேலை' வழங்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்