பூச்சிமருந்து குடித்துவிட்டு காவல்நிலையம் வந்த கள்ளக்காதல் ஜோடி மரணம்
காவல்நிலையத்திற்குள் காலையில் ஜோடியாக வந்த இருவர் பூச்சிமருந்தை குடித்து விட்டோம் என்று கூறி காவல்நிலையத்திற்குள் இருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.
முதல்கட்ட விசாரணையில் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த தங்கம் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான பார்வதி என்பவரும் நெருங்கி பழகி வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து என்ன காரணத்திற்காக இவர்கள் பூச்சி மருந்து குடித்தார்கள்? எங்கு குடித்தார்கள்? என்ன காரணத்திற்காக குலசேகரன்பட்டினம் வந்தார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
