ரவுடிகளுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற காவலரை தாக்கிய கவுன்சிலரின் மகன் - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி

x

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற காவலரை தாக்கிய விவகாரத்தில், திமுக கவுன்சிலரின் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 2 குழந்தைகளுடன் பைக்கில் வந்த பெண் மீது கார் மோதிய சம்பவத்தில், கார் டிரைவரான திமுக கவுன்சிலரின் மகனை ஓய்வு பெற்ற காவலர் மனோகரன் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்தார். இதனால், ஆத்திரத்தில் இருந்த அவர், ரவுடிகளுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற காவலரை தாக்கியதில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனிடையே, இது குறித்து விசாரணை செய்த திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய காவலர் கோவிந்தராஜ் என்பவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்