சிவகங்கை அருகே குடும்ப பிரச்சனையால் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, கவுன்சிலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.
பிள்ளைவயல் காளியம்மன் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கவுன்சிலர் அயூப்கான் என்பவர், உடனடியாக தண்ணீரில் குதித்து, மகேஸ்வரியை மீட்டார்.
இதைத்தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மகேஸ்வரி அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.