முக சுருக்கங்களை சீரமைக்கும் சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறிமுகம்

முதுமை காரணமாக ஏற்படும் முக சுருக்கங்களை சீரமைக்கும் சிசிச்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது
முக சுருக்கங்களை சீரமைக்கும் சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறிமுகம்
Published on
தமிழ்நாட்டிலேயே சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மட்டுமே அழகியல் துறை இயங்கி வருகிறது. தற்போது 50 வயது உடைய மூன்று பெண்களுக்கு முகத்திற்கான சிகிச்சைகள் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேமல்,முகப்பரு மற்றும் முகத்தில் ஏற்படும் பள்ளங்கள், சுருக்கங்கள் ஊசிமருந்து வழியாக சரி செய்யப்படும். மேலும் முதுமை காரணமாக ஏற்படும் சுருக்கங்களையும் தெர்மல் கில்லர் சிகிச்சை ஊசி மருந்து மூலம் முதல்முறையாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு பல லட்ச ரூபாய் செலவாகும் நிலையில் இலவசமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இன்றிலிருந்து தொடங்கப்படுவதாக மருத்துவமனையின் முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம் தெரிவித்தார்..
X

Thanthi TV
www.thanthitv.com