கூட்டுறவு சங்க தேர்தலில் குளறுபடி : தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் ஆணையர், வருகின்ற பிப்ரவரி 19 ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தலில் குளறுபடி : தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு
Published on

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் ஆணையர், வருகின்ற பிப்ரவரி 19 ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், திருச்சி லால்குடி அருகே உள்ள திருமணமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று லால்குடியை சேர்ந்த பரமானந்தம், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com