Sivakasi | Taluk Office | லஞ்ச ஒழிப்பு - சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் எச்சரிக்கை நோட்டீஸ்
லஞ்ச ஒழிப்பு - சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் எச்சரிக்கை நோட்டீஸ்
லஞ்ச ஒழிப்பு - சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் எச்சரிக்கை நோட்டீஸ்
சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைகள் தொடர்பான கோப்புகளின் நிலை குறித்து அறிந்து கொள்ளவும், மனுக்கள் சமர்ப்பிக்கவும் வரும் பொதுமக்கள் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் எதையும் கொண்டு வரக்கூடாது என வட்டாட்சியர் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், விதிமுறையை மீறி பணம் கொண்டு வந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தின் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
