

பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். சென்னையில் தேர்தல் கண்காணிப்பு குழு செயல்பாட்டை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் தொடர்பான புகார்களை நாளை முதல் 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டார். பொதுக்கூட்டங்களில் அரசியல் கட்சிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் வலியுறுத்தியுள்ளோம்