கொரோனா தடுப்புக்கு புதிய செயலி, இணையதளம் ஆன்லைன் மூலம் ஹேக்கத்தான் போட்டிக்கு அழைப்பு - அண்ணா பல்கலை அழைப்பு

கொரோனா தடுப்புக்காக 25 துறைகளை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்க அண்ணா பல்கலைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தடுப்புக்கு புதிய செயலி, இணையதளம் ஆன்லைன் மூலம் ஹேக்கத்தான் போட்டிக்கு அழைப்பு - அண்ணா பல்கலை அழைப்பு
Published on

கொரோனா தடுப்புக்காக 25 துறைகளை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்க அண்ணா பல்கலைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக பிரத்யேக செயலி மற்றும் இணையதளத்தை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்,மும்பை ஐ.ஐ.டி. யில் இயங்கும் ஸ்போக்கன் டுடோரியல் புராஜக்ட் நிறுவனம், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் உள்ளிட்ட 5 நிறுவனங்களுடன் இணைந்து செயலி மற்றும் இணையதளத்தை உருவாக்க ஆன்லைன் மூலம் ஏப்ரல் 27முதல் மே 6ஆம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளது. இதற்கு ஹேக்கத்தான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனோ நோய் தொற்று நபர்களை கண்டறிவது, சிகிச்சை மையத்துக்கு வழிகாட்டுவது, மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை ஒன்றிணைப்பது ஆகியவை நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com