இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருவதால், 5ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்களை பணியில் இறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மூன்று மற்றும் நான்காம் ஆண்டு முடித்த மருத்துவ மாணவர்களை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைகளின் முதல்வர்களுக்கும் தமிழக மருத்துவ கல்வி இயக்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனைகள் வழங்கவும், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முதல்கட்ட ஆலோசனைகளை வழங்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது