

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, காய்ச்சல் அறிகுறிகள் கொண்ட ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையில், தலைமை செயலக ஊழியர்கள் அனைவரும் டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என்றும், கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.