கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை
Published on

ஓமன் நாட்டில் இருந்து தமிழகம் வந்தவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவருக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல, அமெரிக்காவில் இருந்து வந்த சிறுவனும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுப்பது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com