"தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு"

தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், ஜனவரி 11ஆம் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் உள்ள 300 மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கு மேல் தொற்று விகிதம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், லாவ் அகர்வால் தெரிவித்தார்.

அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4 ஆயிரத்து 868 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில்,அதில் ஆயிரத்து 805 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com