தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடிகளை இறக்கி, பக்தர்கள் விரதத்தினை முடித்துக் கொண்டனர். முன்னதாக, கொரோனா மற்றும் பறவை காயச்சலால் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இருமுடி தாங்கி வந்த ஐயப்ப பக்தர்கள், 18 படிகள் ஏறி விரதத்தினை முடித்தனர்.