144 தடை உத்தரவு அமல் : வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான புளிஞ்சூர் சோதனைச்சாவடி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய காணப்படுகிறது...
144 தடை உத்தரவு அமல் : வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
Published on

வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான புளிஞ்சூர் சோதனைச்சாவடி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய காணப்படுகிறது...

கொரோனா வைரஸ் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் வீடுகளில் தனிமைப்பட்டுள்ளவர்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தூய்மை பணியில் துப்புரவு பணியாளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி கடைகள் மட்டும் திறந்துள்ளது. சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்படுகிறது. தூய்மைப் பணியாளர்கள் காய்கறி மார்க்கெட் பால் விற்பனை நிலையம் உள்ளிட்டவைகளில் கிருமிநாசினி மருந்துகளை தெளிப்பான் மூலம் தெளித்து வருகின்றனர்.

சேலத்தில் சந்தையில் குவிந்துள்ள மக்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தை 144 மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டது. உழவர் சந்தைக்கு வரும் வியாபாரிகள் சந்தை வாயிலிலேயே கடைகள் அமைத்துள்ளனர். ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com