11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு
Published on

தற்போது உள்ள நெருக்கடி நிலையால், மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வர காலதாமதமாகும் என்பதால், அரை மணிநேரம் தாமதமாக தேர்வை துவக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் இன்று நடைபெற இருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com