நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று - அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா தொடர்பான சுகாதார பணிகளை மேலும் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று - அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை
Published on
தலைமைச்செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், சென்னை பெருநகர வளர்ச்சி குழு உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தமிழகத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1.90 கோடி ​ரூபாய் மதிப்பீட்டில் கிருமி நாசினி தெளிப்பது, கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் சமூக விலகலை உறுதி செய்வது, முக கவசம் அணிவது, உடனுக்குடன் குப்பைகளை அகற்றுவது, வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில், சுகாதார பணியை துரிதப்படுத்தும் வகையில் கூடுதல் பணியாளர்களை அமர்த்த ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com