மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் - சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை சேமிக்க 2 ஆயிரத்து 600 இடங்களில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் - சுகாதாரத்துறை
Published on

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளபடி, மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தமிழக மருத்துவப்பணிகள் கழகம் என மொத்த 2 ஆயிரத்து 600 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளை சேமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்தம் 2 கோடி எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை சேமிக்க முடியும் என சுகாதாரத்தை தகவல் அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com