

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூரை சேர்ந்த மருத்துவர் அகிலா கடந்த வாரம் பயிற்சி முடிந்ததற்கான சான்றை பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி இருவரும் படுகாயமடைந்தனர். கடந்த ஒரு வாரமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகிலா பரிதாபமாக உயிரிழந்தார்.