Corona | கொரோனாவில் இருந்து காப்பாற்றிய மருத்துவமனை.. நன்றிக்கடன் செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலின்போது தன்னை காப்பாற்றிய அரசு மருத்துவமனைக்காக சண்முகசுந்தரம் என்பவர் மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
சிதம்பரம் அருகே ஓமக்குளம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையால் குணமடைந்தார். இதனை மறக்காத அவர், தன்னை குணப்படுத்திய மருத்துவமனைக்காக ரூபாய் 2 லட்சம் செலவில் வீல் சேர், ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி கொடுத்தார்.
Next Story
