இத்தாலியில் இருந்து வந்த நபருக்கு கொரோனா என வதந்தி - வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவரை கைது செய்த போலீசார்

இத்தாலியில் இருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணி வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு என வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.
இத்தாலியில் இருந்து வந்த நபருக்கு கொரோனா என வதந்தி - வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவரை கைது செய்த போலீசார்
Published on

இத்தாலியில் இருந்து, பேராவூரணிக்கு விமானம் மூலம் வந்த நபருக்கு, அனைத்து மருத்துவ பரிசோதனையும் நடந்து முடிந்து கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று அவரை புகைப்படம் எடுத்து இத்தாலியில் இருந்த வந்த நபருக்கு, கொரோனா எனக் கூறி, மணிகண்டன் என்பவர், வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியுள்ளார். இந்த வதந்தியால் மருத்துவர்கள், மீண்டும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்து ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தவறான தகவலை பரப்பிய மணிகண்டனை கைது செய்தனர். பின்னர், இத்தாலியில் இருந்து வந்த அந்த நபருக்கு எந்த உடல்நலக் குறைவும் இல்லை என வீடியோ வெளியிடுமாறு அறிவுரை கூறி, அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com