கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக இதுவரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பலரும் நிதி வழங்கி வரும் நிலையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் அளித்த நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.