கொரோனா நிவாரணம் - 2 ஆம் தவணை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

கொரோனா நிவாரண உதவி தொகை இரண்டாவது தவணை 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மலிவு விலை மளிகை பை வழங்கிடும் ​திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் மாதம் 3 ஆம் தேதி, துவக்கி வைக்கிறார்.
கொரோனா நிவாரணம் - 2 ஆம் தவணை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
Published on

கொரோனா நிவாரணம் - 2 ஆம் தவணை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

கொரோனா நிவாரண உதவி தொகை இரண்டாவது தவணை 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மலிவு விலை மளிகை பை வழங்கிடும் ​திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் மாதம் 3 ஆம் தேதி, துவக்கி வைக்கிறார்.தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், நியாயவிலை கடைகளில் மளிகை பொருட்கள் விநியோகம், கொரோனா நிவாரணம் வழங்குவதில் எந்த வித தவறும் நடைபெற கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தரமற்ற அரிசி நியாய விலை கடைகளுக்கு வந்தால், உடனடியாக அதனை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கொரோனா நிவாரணம் இரண்டாவது தவணை மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மலிவு விலை மளிகை பை வழங்கும் ​திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி, துவக்கி வைக்க உள்ளதாக உணவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நியாயவிலைகடைகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com