

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவுக்கு எதிராக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர், தியாகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். மனித வாழ்வை பாதுகாப்பதை கடமையாகக் கொண்டு செயல்படும் அவர்களின் தியாகத்தை நாம் மறந்து விடக் கூடாது என தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பேரலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், மனித குலத்தை பாதுகாக்க தீவிர முயற்சிகளை எடுக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினருடன் தோளோடு தோள் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.