கொரோனாவில் இருந்து தப்பிய 26 வயது இளைஞர் - கரவொலி எழுப்பி அனுப்பிவைத்த மருத்துவர்கள்

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிய 26 வயது இளைஞரை மருத்துவர்கள், செவிலியர்கள் கர ஓசையோடு வழியனுப்பி வைத்தனர்
கொரோனாவில் இருந்து தப்பிய 26 வயது இளைஞர் - கரவொலி எழுப்பி அனுப்பிவைத்த மருத்துவர்கள்
Published on

துபாயில் இருந்து ராணிப்பேட்டைக்கு திரும்பிய 26 வயது இளைஞர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதன்முதலாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தார். கடந்த 22ஆம் தேதி சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரத்தமாதிரியை இரண்டு முறை சோதனை செய்ததில் முழுமையாக குணமடைந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைகளை தட்டி மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த 16 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதால் அவர்களும் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் உதவியோடு அனுப்பி வைக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com