உயிர் பலி வாங்கிய கொரோனா - உஷாராகும் தமிழகம்
தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறையின் சார்பில் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மறைமலை நகர் பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60 வயதான நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது இல்லத்தைச் சுற்றி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது என்.பி. 1.8.1 மற்றும் எல்.எப்.7 ஆகிய இரண்டு புதிய கொரோனா வகைகள் பரவி வருகின்றன. இந்த இரு வகைகளும் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு பட்டியலில் உள்ள நிலையில், உயிரிழந்த முதியவருக்கு எந்த வகை கொரோனா பாதிப்பு இருந்தது என்பதை உறுதி செய்ய, மரபணு பகுப்பாய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
Next Story
