

மதுரை மாவட்டம் சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த ரவி சந்திரன் "தனி ஒருவனாக " கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவர் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரான தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து "தனி ஒருவனாக " தனது ஆம்னி வேனில் ஸ்பீக்கர் கட்டிக்கொண்டு கிராமம் தோறும் கொரான தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டீக்கடை நடத்தி வரும் இவர் தனது சொந்த செலவில் இது வரை ரூபாய் 50 ஆயிரம் பணம் செலவழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இதற்காக திருமங்கலம் எஸ்.பி. வினோதினி இவரை பாராட்டி கேடயம் வழங்கினார் .