சென்னையில் அதிர்ச்சி... கூவத்தில் விழுந்த பெண்... பதற வைத்த மீட்பு காட்சி
சென்னை மாநகராட்சி மதுரவாயல் தொகுதி நெற்குன்றம் 148 வது வார்டு புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (37) இவர் கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார் .இந்த நிலையில் வீட்டு வேலை செய்வதற்காக தனது வீட்டிலிருந்து நேற்று மாலை அவர் வீட்டு அருகே செல்லக்கூடிய அகண்ட கூவம் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்த காரணத்தால் சேரும் சகியுமாக இருந்த நிலையில் எதிர்ப்பாரத விதமாக அதில் வழக்கிய நிலையில் தவறி விழுந்துள்ளார். சுமார் 40 அடி அகலமும் 15 அடி ஆழமும் கொண்ட இந்த கால்வாயில் தேவி எதிர்பாராத விதமாக தவறி விழுந்த நிலையில் சேற்றில் சிக்கி மீள முடியாமல் உயிர் பயத்தில் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்கவே உயிருக்கு போராடி தத்தளித்து கொண்டு இருந்த தேவியைய் பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் வினோத் என்பவர் பொக்லைன் இயந்திரத்தை வைத்து கீழே இறங்கி அதன் மூலம் கால்வாயில் சேற்றில் சிக்கி தவித்து வந்த தேவியைய் பத்திரமாக மேலே மீட்டார். இதில் சிறிது காயங்கள் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் தேவியைய் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நிலையில் 40 அடி அகலம் கொண்ட கால்வாயில் பெண் தவறி விழுந்து உயிருக்கு போராடி அவரை மீட்க கூடிய பரபரப்பு காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது..
