கூட்டுறவு கடன் சங்க ஊழியர் தற்கொலை - உறவினர்கள் தர்ணா

x

திருச்சிதஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தற்கொலை செய்து கொண்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதுநிலை எழுத்தர் சாமிநாதனின் கருத்திருக்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் 1/2 மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முதுநிலை எழுத்தர் சாமிநாதனின் தற்கொலைக்கு நீதி கேட்டு குடும்பத்தினர் உறவினர்கள் தர்ணா போராட்டம்

.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது இந்த கடன் சங்கத்தில் கடந்த 30ஆம் தேதி அடகு வைத்த நகையை திருப்ப பெறுவதற்காக ஒருவர் வந்தார் அப்போது அவர் வைத்து நகையில் இரண்டரை பவுன் நகை குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பணியில் இருந்த முதுநிலை எழுத்தர் சாமிநாதன் மற்றும் நகை மதிப்பீட்டாளர் கிருத்திகா ஆகியோர் செயலரிடம் புகார் அளித்தனர். அவர் விடுமுறையில் இருப்பதால் வந்து பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நகையை கணக்கிட்டு பார்த்ததில் மேலும் 200 கிராம் நகை குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை பார்க்கும் செயலர் பத்மாவதி, நகை மதிப்பீட்டாளர் கிருத்திகா, முதுநிலை எழுத்தர் சாமிநாதன் மற்றும் உர விற்பனையாளர் ராமதாஸ் ஆகிய நான்கு பேரும் நகைக்கு ஈடாக பணம் தரும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சாமிநாதன் 4 லட்சம் மற்றும் 15 பவுன் தங்க நகை ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அங்கிருந்து அவர்கள் சாமிநாதனிடம் மேலும் 7 லட்சம் ரூபாய் பணம் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டுறவு கடன் சங்கத்தின் அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்ட போது நகை கையாளர்கள் செய்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கையாடல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த முதல் நிலை எழுத்தாளர் சாமிநாதன் சிறிது நேரத்திலேயே கடன் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்.

மதியம் அவர் கல்லணை அருகே உள்ள காட்டுப் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் உறவினர்கள் அங்கு சென்ற வாரத்துக்கு போது அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.

மேலும் அவரிடம் இருந்து இரண்டு கடிதங்கள் கைப்பற்றப்பட்டது அதில் தனது சாவிற்கு நகை மதிப்பீட்டாளர் கிருத்திகாவும் உறவு விற்பனையாளர் ராமதாஸ் காரணம் என எழுதி இருந்தார்.

இந்த நிலையில் சாமிநாதனின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், கையாடல் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் சாமிநாதனின் உறவினர்கள் இன்று காலை நடராஜபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவரம்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் இது தொடர்பாக நான்கு நாட்கள் பிரச்சனை நிலவு வந்த நிலையில் இதுவரை யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் தற்போது போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமான கேட்டார்.

மேலும் இங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் உயிரோடு இருந்தாலும் இறந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்த நிலையில் உறவினர்கள் நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்