ராசிபுரத்தை அடுத்த காக்காவேரி கூட்டுறவு வங்கியின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்த கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை தப்பியது. நகை, பணம் இருக்கும் பெட்டக அறையை கடப்பாறையால் உடைக்க முயன்ற போது, எச்சரிக்கை மணி ஒலித்தால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து நாமகிரிபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.