'கூலி' வெற்றி -கருப்பசாமி கோயிலில் ரஜினிகாந்த் மகள் கணவருடன் தரிசனம்
'கூலி' வெற்றி - கருப்பசாமி கோவிலில் ரஜினிகாந்த் மகள் வழிபாடு
'கூலி' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மதுரை அழகர் மலை 18ஆம் படி கருப்பசாமி கோயிலில், ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். கணவர் விசாகனுடன் வந்த அவரை ரஜினி ரசிகர்கள் வரவேற்றனர். பின்னர், கள்ளழகர் கோவில் முன்பாக வீற்றிருக்கும் காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி மற்றும் சுந்தரராஜ பெருமாள் சமேத தாயார் சன்னதி உள்ளிட்ட கோவில்களில், அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு, சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், அவரது கணவர் விசாகனுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
