Coolie Movie | Rajinikanth | Madurai | `கூலி' படத்திற்கு இலவச டிக்கெட்.. கொண்டாடும் மதுரை ரசிகர்கள்
மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் கூலி திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி கொண்டாடியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வரும் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மதுரையில் 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் முதல் காட்சி, ரசிகர் மன்ற சிறப்பு காட்சியாக திரையிடப்பட உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, கிருஷ்ணராயர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். அதன் பின்னர் பொதுமக்களுக்கு கூலி படத்திற்கான இலவச டிக்கெட்டும், இனிப்புகளையும் வழங்கினர்..
Next Story
