முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்... கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே, முன்விரோதம் காரணமாக, கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். யாக்கோபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வன் என்பவரை, முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பேரின்பராஜ், ராஜா, ராமசாமி, காக்கா நாகராஜன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com