குக்கிங் வித் குயின் சமையல் போட்டி - இல்லத்தரசிகள், மாணவிகள் அசத்தல்
சேலத்தில், தினத்தந்தி நிறுவனம் மற்றும் சிவராஜ் கேட்டரிங் கல்லூரி இணைந்து நடத்திய எண்ணெய் மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சூரமங்கலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் தினத்தந்தி மேலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். குக்கிங் வித் குயின் என்ற தலைப்பில் எண்ணெய் மற்றும் நெருப்பில்லாமல், 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் அசத்தினர். சிறப்பான உணவு வகைகளை சமைத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Next Story
