'இந்தி'-யில் வைத்த பெயர்ப் பலகைகளால் சர்ச்சை?

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெயர்ப் பலகைகளில் ஊர்களின் பெயர்கள் 'இந்தி'-யிலும் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூரில் இருந்து திருப்பத்தூர் வழியாக மானாமதுரைக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும், விக்கிரவாண்டியில் இருந்து மானாமதுரைக்கு செல்லும் சாலையிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவைகளில், ஊர்களின் பெயர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் இருந்த நிலையில், புதிதாக 'இந்தி'-யிலும் இடம்பெற்று இருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்ச்சையயையும் ஏற்படுத்தி உள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com